இயற்கை வாழ்வியலை கடைப்பிடிப்பதன் மூலம் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியுமா?
வாழ்வின் நீளம்(longevity) அல்லது உயிர்சக்தி அல்லது உயிராற்றலின் அளவை கூட்டுவது இயற்கை வாழ்வியலின் நோக்கம் அல்ல, அப்படி கூட்டுவது சாத்தியமும் அல்ல. இயற்கை வாழ்வியலை கடைபிடிப்பதன் மூலம் ஒருவர், 1. உயிராற்றலை தனது வாழ்வின் தேவைக்கேற்ப சிறப்பாக பயன்படுத்தி கொள்ள முடியும். 2. வாழ்வின் அதிக நாட்களுக்கு அல்லது கடைசி மூச்சு வரை சிறப்பாக இயங்கி(Fully Functional Life) கொண்டிருக்க முடியும். 3. தவறான வாழ்க்கை முறைகளால் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் மரணத்தில் இருந்து காத்து கொள்ள முடியும். அன்புடன், வினோத் குமார் வி எஸ்