இயற்கை வாழ்வியல் அறிமுக கூட்டம் - வேலூர் 27 அக்டோபர், 2017
தசரதன் அய்யாவின் உரை
27 அக்டோபர், 2017 ல் வி ஜி ராவ் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் இயற்கை வாழ்வியல் குறித்த ஒரு அறிமுக உரைக்கு தசரதன் அய்யா சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர், அவருக்கு துணையாக நானும் எனது மனைவியும் கூட்டத்தில் கலந்து கொண்டோம். மாலை 6.30 க்கு தொடங்கிய கூட்டத்தில் தசரதன் அய்யா இயற்கை வாழ்வியலின் பல்வேறு அம்சங்களையம் அவரது சொந்த அனுபவத்தையும் விளக்கினார்.
1995'ல் இருந்து தசரதன் அய்யா இயற்கை வாழ்வியல் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரில் இயற்கை வாழ்வியல் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
எனது உரை
இறுதியாக கேள்வி பதில் நேரத்தில் பதில் அளித்து விட்டு ஒரு சிற்றுரையை ஆற்றினேன். பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உரையாடியது நிறைவாக இருந்தது.
கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன் புகைப்படம்
பங்கேற்ற அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டு, மீண்டும் ஒரு முறை இயற்கை வாழ்வியல் கூட்டத்தை நடத்துவோம் என்று உறுதி அளித்து விட்டு, தொடர்பு என்னை பரிமாறி கொண்டு சுமார் 8.40 மணிக்கு விடைபெற்றோம்.
வினோத் குமார் வி எஸ்
சிறப்பு.
ReplyDeleteநன்றி :)
Delete