டோனா (அல்லது) அகிம்சை எனிமா
டோனா (அல்லது) அகிம்சை எனிமா
- மேற்கண்ட படத்தில் உள்ளது எனிமா கேன் அல்லது இயற்கை எனிமா என்றழைக்க படும் கருவி. இவை பெரும்பாலான காதி அங்காடிகளிலும், இயற்கை மருத்துவ நிலையங்களிலும் கிடைக்கும்.
- இயற்கை மருத்துவர் திரு அருண் சர்மா அவர்களின் வழிகாட்டலின் படி இவற்றை டோனிங்(Toning) செய்யும் நோக்கத்தோடு பயன்படுத்துவதால் டோனா(Tona) என்றழைக்கபடுகிறது.
- பொதுவாக இந்த கருவியில் 500 மில்லி யில் இருந்து 1 லிட்டர் அளவு நீர் பயன்படுத்தப்படுகிறது அவற்றுக்கு மாறாக அருண் சர்மா அவர்கள் 300 மில்லி நீரே போதுமானது என்பதை தனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார். குழந்தைகளுக்கு இன்னும் குறைவான நீரே (150 மில்லி) போதுமானது.
- குறைவான நீரை பயன்படுத்தும் பொழுது அவை இயற்கை மருத்துவத்தின் அகிம்சை தத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும், கடினப்பட்ட மலத்தை வெளித்தள்ளுதல் என்ற நோக்கத்தோடு மட்டும் அல்லாமல் மல குடலை வலிமைப்படுத்துதல், இயற்கையாக மலம் கழிக்கும் தன்மையை அதிகப்படுத்துதல் என்ற நோக்கத்தோடு பயன்படுத்தப்படுகிறது.
- டோனாவில் குடிப்பதற்கு தகுதியான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மூலிகை பொடிகளோ, எண்ணையோ, சோப்பு நீரோ கண்டிப்பாக பயன்படுத்த கூடாது.
- டோனா எந்த ஒரு வலியும் இல்லாத ஆரோக்கியத்தை பெருக்கும் நடைமுறை ஆதலால் கவலை மற்றும் பயம் இன்றி பயன்படுத்தலாம். பழகும் வரை நாசில்(Nozzle) மற்றும் ஆசன வாயில் சிறிது தேங்காய் எண்ணையை தடவி கொள்ளுதல் நலம்.
- இயற்கை வாழ்வியல் நிபுணரின் அறிவுரை படி குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்திய பின்னர் வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆரோக்கியத்தை பேணும் ஒரு நடைமுறையாக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
- உபவாசம் (அ) பட்டினி இருக்கும் நேரத்திலும், தீவிர நோய் இருக்கும் நேரத்திலும் டோனா மிகுந்த பலன் தர கூடிய ஒரு நடை முறை.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நல்வாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102
Comments
Post a Comment