ஐந்து அடுக்க உணவுகள் - 1!
image credits: http://bestenvironment.org/panchaboothas.html |
பொதுவாக உணவு என்ற கருத்தியல் நாம் வாயினால் உண்ண கூடிய உணவை சார்ந்தே புரிந்து கொள்ளப்படுகிறது ஆனால் இந்த உடலோடு மாறுபாடில்லாமல் சேரக்கூடிய அனைத்துமே உணவு தான். இயற்கை வாழ்வியலில் இதை ஐந்து அடுக்க உணவுகள் என குறிப்பிடுகிறோம், ஆன்மீகவாதிகள், இயற்கையாளர்கள் இதை பஞ்ச பூத தத்துவம் என்கின்றனர்.
"வெளி யில் இருந்து வளி, வளியில் இருந்து ஒளி, ஒளியில் இருந்து நீர், நீரில் இருந்து நிலம், நிலத்தில் இருந்து தாவரம், தாவரத்தில் இருந்து உணவு"வெளி(Space):
வெளி மிக நுட்பமான(Subtler Food) ஒரு உணவு, இங்கு வெளி எனப்படுவது இடைவெளி, வெட்ட வெளி, வெற்றிடம் என்பதை குறிப்பது. இடைவெளி குறைந்த உடலில் நோய் எளிதில் குடியேறும், வளரும். இடைவெளி குறைத்து உடலில் சுழற்சி தடைபெறும், கழிவுகள் தேங்கி நிற்கும், சரியான அளவு வெற்றிடம் உள்ள உடல் நிலையான ஆரோக்கியம் பெற்றிருக்கும்.
நல்ல பசியெறிந்து, தேவைக்கு மிகாமல் உண்ணுதல், உடலின் தேவைக்கு மாறுபாடில்லாத, கழிவுகள் குறைவாக உள்ள உணவை உண்ணுதல், உடலின் தேவை அறிந்து பட்டினி இருத்தல், தேவையறிந்து ஓய்வெடுத்தல் போன்றவற்றின் மூலம் வெளி எனும் உணவை உட்கொள்ள முடியும்.
நோயில் இருந்து விடுபடும் முயற்சியில் வெளி மிக முக்கிய பங்காற்றுகிறது.
"லங்கனம் பரம ஒளஷதம்" என்று சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள் அதன் பொருள் உண்ணா நோன்பை போன்ற சிறந்த மருத்துவம் கிடையாது என்பதாகும்.
பட்டினி இருத்தல் (அ) உபவாசம் (அ) உண்ணா நோன்பு பற்றி பிற இடுகைகள்
http://vsvinothkumar.blogspot.in/2017/06/fasting.html
-தொடரும்
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நல்வாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102
Comments
Post a Comment