வேலூர் இயற்கை நலவாழ்வியல் இயக்கம் - நவம்பர் மாத கூட்டம்
மூ ஆ அப்பன் அய்யா
வேலூர் இயற்கை நலவாழ்வியல் இயக்கம் - நவம்பர் மாத கூட்டம் தசரதன் அய்யா ஒருங்கிணைப்பில் நவம்பர் 5 காலை 10 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் 16 நபர்கள் பங்கு பெற்றனர்.
சிறப்பு விருந்தினராக மூ ஆ அப்பன் அய்யா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தான் இயற்கை உணவு மூலம் நோயிலிருந்து விடுபட்ட அனுபவத்தையும், தனது புத்தகத்தை படித்து குணம் பெற்றவர் அனுபவங்களையும் இயல்பாகவும் அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் எடுத்துரைத்தார். 78 வயதில் தனது ஆரோக்கியம், வலிமை ஆகியவற்றை நிறுவும் விதமாக அவரது பேச்சு மற்றும் உடல் மொழியின் வீரியம் அமைந்திருந்தது.
நவம்பர் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் இயற்கை வாழ்வியல் முகாம் பற்றிய விபரங்களை வந்திருந்த நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொன்டேன்.
முகாம் பற்றிய தகவல்களுக்கு: http://bit.ly/2zxsFa3
அப்பன் அய்யாவிடம் சில நிமிட கேள்வி பதில்களுக்கு பிறகு சுமார் 12.30 மணியளவில் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டு அனைவரும் விடைபெற்றனர்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நல்வாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102
Comments
Post a Comment