நோயற்று வாழட்டும் உலகு - சுந்தர், ஸ்ரீ பாரம்பரிய இயற்கை உணவகம், வேலூர்.
சுந்தர், ஸ்ரீ பாரம்பரிய இயற்கை உணவகம், வேலூர் |
செப்டம்பர், 2017'ல் வேலூரில் குடியேறியதில் இருந்தே ஆரோக்கிய உணவு கிடைக்க கூடிய உணவகங்களை தேடி கொண்டிருக்கிறேன். நண்பர் முகேஷின் உதவியால் இன்று அத்தகைய ஒரு உணவகத்தை கண்டு பிடித்து விட்டேன் :-)
சுந்தர் கடந்த மூன்று வருடங்களாக காட்பாடி EB அலுவலகம் அருகில் ஸ்ரீ பாரம்பரிய இயற்கை அங்காடி மற்றும் உணவகத்தை நடத்தி வருகிறார். அவரது உணவக பேனரிலும், விஸிட்டிங் கார்டிலும், அவரது எளிமையான அன்பிலும் "நோயற்று வாழட்டும் உலகு" என்பதை அழுத்தமாக பதிவு செய்தார்.
சுந்தர் மற்றும் முகேஷ் |
முகேஷுடன் சென்றதால் நல்ல உபசரிப்போடு சூடாக 4 தட்டைகளும் கிடைத்தது 😊 சில நேரங்களில் முகேஷிற்குள் ஒளிந்திருக்கும் பெருங்கடலை கண்டு வியப்பாக இருக்கிறது. ஒரு வருடமாக வேலூரில் எனக்கு கிடைத்த நட்புகள், தொடர்புகள் பெரும்பாலானவை முகேஷின் அறிமுகத்தால் நிகழ்ந்தவை🌱.
சுந்தருடன் சிறிது நேரம் உரையாடி கொண்டிருந்தோம். சமையல் மேலிருந்த ஈடுபாடும், நல்ல தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பமும் தான் ஸ்ரீ பாரம்பரிய இயற்கை அங்காடி மற்றும் உணவகமாக உருப்பெற்றதாக கூறினார். அங்காடியில் பொருட்களை வாங்கி கொண்டு, ராகி களி மற்றும் சாம்பார் சாதத்தை நானும் முகேஷும் பகிர்ந்து கொண்டோம். சமையல் அறையில் ஆர்டரின் அடிப்படையில் சிறுதானிய லட்டு தயாராகி கொண்டிருந்தது, அதன் மணம் உமிழ் நீர் சுரப்பிகளின் வாழ்வில் விளையாடி கொண்டிருந்தது 😭
வீட்டுக்கு ஒரு களி வாங்கி கொண்டேன். இனிமேல் சோம்பேறி தனத்திற்கும், ஆரோக்கியமாக பார்ட்டி கொண்டாடுவதற்கும் சுந்தரின் உணவகத்தில் சரணாகதி அடைந்து விடலாம் என்ற எண்ணத்தோடு விடை பெற்றோம்.
ஸ்ரீ பாரம்பரிய இயற்கை அங்காடி மற்றும் உணவகத்தில் மதிய மற்றும் இரவு உணவு பரிமாறப்படுகிறது, ஆர்டரின் அடிப்படையிலும் உணவு தயாரித்து தருகிறார் என்று புரிந்து கொண்டேன். உணவகத்தோடு உள்ள அங்காடியில் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் ஆரோக்கிய பொருட்கள் கிடைக்கிறது.
மேலும் தகவலுக்கு:
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
+91 95978 50102
Comments
Post a Comment