அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!
Toxin (விஷம்), Detox (விஷத்தை வெளியேற்றுதல்) போன்ற வார்த்தைகள் இன்று ஆரோக்கிய வாழ்வை வாழ நினைப்பவர்கள் மத்தியில் பரவலாக உபயோக படுத்தப்பட்டு வருகிறது. Toxin என்ற உடனே நம் மனது ஏதோ கொடிய விஷத்தை கற்பனை செய்து கொள்கிறது, Detox என்பது அந்த கொடிய விஷத்தை வெளியேற்றும் செயல் முறையாக பார்க்கப்படுகிறது. உண்மையில் Toxin என்று குறிப்பிடபடுவது விஷ தன்மை கொண்ட பொருட்களை மட்டுமல்ல, இந்த உடலின் தேவைக்கு அதிகமாக உட்கொண்ட, கழிவாக வெளியேறாமல் தேங்கி விட்ட உணவு பொருட்கள் விஷத்தன்மை பெறுகிறது.
Detox(விஷத்தை வெளியேற்றுதல்)/ Elimination of Waste(கழிவுகளை வெளியேற்றுதல்) என்பது இந்த உடலின் அடிப்படையான செயல்பாடு. தவறான உணவு மற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்களினால் இந்த செயல்பாடு தடைபடுகிறது, தொய்வடைகிறது அத்தகைய பழக்க வழக்கங்களை கண்டறிந்து சரி செய்வதன் மூலம் சுத்தமான உடலையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும் மாறாக ஒரு குறுகிய கால Detox திட்டத்தை கடைப்பிடிப்பது என்பது குறுகிய மனப்பான்மையோடு தற்காலிக நிவாரணத்தை பெரும் முயற்சி மட்டுமே.
குறள் 945:
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
இந்த உடலின் தன்மைக்கு ஏற்ப மாறுபாடில்லாத உணவை, அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நல்வாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102
Comments
Post a Comment