Recipe: சாத்விக காய்கறி கூட்டு!


தேவையான பொருட்கள்:

  • ஒரு விதமான நீர் காய்கறி - 500 கிராம் ( சவ் சவ்/ வெண் பூசணி/ புடலங்காய்/ பீர்க்கங்காய் ..)
  • சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் 
  • தேங்காய் - 1/2 மூடி
  • பச்சை மிளகாய் (அல்லது) காய்ந்த மிளகாய் (அல்லது) மிளகு - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை:
  • காய்கறிகளை சிறிது சிறிதாக வெட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைக்கவும்   
  •  இரண்டு அல்லது மூன்று விசில் வந்தவுடன்  அடுப்பை அணைத்து விடவும்
  • அரை மூடி தேங்காய், 1 டேபிள் ஸ்பூன் சீரகம், காரத்திற்கு சிறிதளவு  பச்சை மிளகாய் (அல்லது) காய்ந்த மிளகாய் (அல்லது) மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து வேக வைத்த காய்கறியில் சேர்க்கவும்
  • தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கிளறவும்

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடனோ அல்லது நேரடி உணவாகவோ உட்கொள்ளலாம்.

குறிப்பு: 
*அடுப்பை அணைத்த பிறகு தான் தேங்காய், சீரகம், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்
*காரம் மற்றும் உப்பு  முடிந்த வரை குறைவாக பயன் படுத்தப்பட வேண்டும்
*எண்ணெய், கடுகு போன்றவை சேர்க்க தேவையில்லை


அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நலவாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102

Comments

Popular posts from this blog

My Profile as a Wellness Coach!

Get Started with Green Juice!

Dr Arun Sharma, IMANAH, USA in Vellore (15, 16, 17 Feb 2018)