வெளியை போற்றுவோம்
வணக்கம்!
ஜூன் 6 2019, வேலூர்.
இயற்கை வாழ்வியல் பயிற்சிகளில் வெளி அல்லது இடைவெளி (Space) எப்படி நமது ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறது என்பதைப் பற்றி அறிவார்ந்தும், அனுபவத்தின் வாயிலாகவும் புரிந்து கொண்டோம். பொதுவாக பசித்துப் புசிப்பது, உபவாசம் மற்றும் தியானப் பயிற்சி மூலமாக வெளியை உருவாக்குகிறோம், இதைத் தவிர பல்வேறு வழிகளில் நமது அன்றாட வாழ்வில் வெளியை உருவாக்கிக் கொள்ள முடியும், அவற்றில் சில வழிகளை பார்ப்போம்,
உங்களிடம் உள்ள பயன்படுத்தாத(இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல்), உபரியாக இருக்கும் பொருட்களை அல்லது தேவையற்ற பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு அன்பளிப்பாகவோ அல்லது நியாயமான விலைக்கோ அளிப்பது.
புதியதாக ஒரு பொருளை வாங்கும்போது அது அவசியமானதா, அத்தியாவசியமானதா, விருப்பத்திற்காக வாங்க விரும்புகிறோமா, வசதிக்காக வாங்க விரும்புகிறோமா அல்லது வெளிப்புற காரணிகளால் தூண்டப்பட்டு வாங்க விரும்புகிறோமா என்பதைப்பற்றிய விழிப்புணர்வை கொண்டிருத்தல்.
வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் போதிய அளவு நேரமும், இடைவெளியும், முக்கியத்துவமும் அளித்தல் மற்றும் முழுமையான விழிப்புணர்வோடு இருத்தல்.
ஒருசில பரிமாணங்களின் ஆரோக்கியம் தாழ்ந்து இருப்பின் அதற்கான நேரமும், இடைவெளியையும் அளித்தல்.
பேசுவோம்.
அன்புடன்,
வி எஸ் வினோத் குமார், இயற்கை வாழ்வில் நிபுணர்
+91 95978 50102
வி எஸ் வினோத் குமார், இயற்கை வாழ்வில் நிபுணர்
+91 95978 50102
Excellent
ReplyDelete