கேள்வி: நாள் முழுவதும் எனக்குத் தோன்றும் ஏராளமான எண்ணங்களைக் குறைக்க நான் என்ன செய்ய முடியும்? பதில்: பொதுவாக எண்ணங்களை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான முயற்சிகளும் ஒரு முழுமையான தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை அடைய செய்யப்படும் தினசரி பயிற்சிகள் மூலம் எண்ணங்களின் தீவிரம் குறைய தொடங்கும். அப்படிப்பட்ட சில பயிற்சிகளை இங்கு பார்க்கலாம், 1. நடனம் / தீவிர உடற்பயிற்சி - இசையுடன் கூடிய அல்லது கண்களை மூடிய நிலையில் உடலில் கவனத்தை வைத்து செய்யப்படும் நடனம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை சில மணித்துளிகள் அடையலாம், அது எண்ணத்தின் தீவிரத்தை பெருமளவு குறைக்கும் இதை creative dance therapy/ dynamic meditation என்று அழைப்பார்கள். 2. தியானப் பயிற்சி - ஆனா பானா (உள்மூச்சு, வெளிமூச்சை கவனித்தல்), விபாசனா (உடலில் ஏற்படும் உணர்வுகளை கவனித்தல்), இதய நிறைவு பயிற்சி (இதயத்தை கவனித்தல்) போன்ற தியான முறைகளில் ( Mindfulness/ Awareness/ Consciousness/ Meditation Practices ) ச...