கேள்வி பதில்கள்: அதிக படியான எண்ணங்கள், முடிவில்லா எண்ண ஓட்டம்!
- Get link
- X
- Other Apps
கேள்வி: நாள் முழுவதும் எனக்குத் தோன்றும் ஏராளமான எண்ணங்களைக் குறைக்க நான் என்ன செய்ய முடியும்?
பதில்:
பொதுவாக எண்ணங்களை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான முயற்சிகளும் ஒரு முழுமையான தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை அடைய செய்யப்படும் தினசரி பயிற்சிகள் மூலம் எண்ணங்களின் தீவிரம் குறைய தொடங்கும். அப்படிப்பட்ட சில பயிற்சிகளை இங்கு பார்க்கலாம்,
பொதுவாக எண்ணங்களை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான முயற்சிகளும் ஒரு முழுமையான தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை அடைய செய்யப்படும் தினசரி பயிற்சிகள் மூலம் எண்ணங்களின் தீவிரம் குறைய தொடங்கும். அப்படிப்பட்ட சில பயிற்சிகளை இங்கு பார்க்கலாம்,
1. நடனம் / தீவிர உடற்பயிற்சி - இசையுடன் கூடிய அல்லது கண்களை மூடிய நிலையில் உடலில் கவனத்தை வைத்து செய்யப்படும் நடனம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை சில மணித்துளிகள் அடையலாம், அது எண்ணத்தின் தீவிரத்தை பெருமளவு குறைக்கும் இதை creative dance therapy/ dynamic meditation என்று அழைப்பார்கள்.
2. தியானப் பயிற்சி - ஆனா பானா (உள்மூச்சு, வெளிமூச்சை கவனித்தல்), விபாசனா (உடலில் ஏற்படும் உணர்வுகளை கவனித்தல்), இதய நிறைவு பயிற்சி (இதயத்தை கவனித்தல்) போன்ற தியான முறைகளில் (Mindfulness/ Awareness/ Consciousness/ Meditation Practices) சிலவற்றை கற்று தினமும் பயிற்சி செய்யலாம். ஆரம்ப காலத்தில் பயிற்சி நேரத்தில் உணரப்படும் அமைதி தொடர் பயிற்சின் மூலம் நாள் முழுவதும் உணர முடியும்.
3. உங்களுக்கு பிடித்தமான, படைப்பாற்றலை வெளிப்படுத்த கூடிய செயல்களை (Creative Occupation) தினசரி வாழ்வில் செய்ய தொடங்குவதன் மூலம் அவசியமற்ற எண்ணங்கள் குறைய தொடங்கும். இதை unwindingஎன்று அழைப்பார்கள்.
4. மிக முக்கியமாக செய்தி தாள்கள், செய்தி சேனல்கள், மெகா சீரியல்கள் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய திரைப்படங்கள் (Triggers)போன்றவற்றை தவிர்த்து அவசியமான செயல்களில் மட்டும் நேரத்தை பயன்படுத்துவதும், தேவையான அளவு ஓய்வு எடுப்பதும் மிகுந்த பலன் அளிக்கும்.
5. உணவில் டீ/ காபி/ போதை பொருட்கள் மற்றும் ஊக்கத்தை பெருக்க கூடிய (Stimulants) பொருட்களை முடிந்த வரை தவிர்ப்பதின் மூலம் மனதிற்கு நல்ல ஒரு ஓய்வை அளிக்க முடியும் .
மேலும் உதவிக்கு ஒரு இயற்கை வாழ்வியல் நிபுணரை/ தியான ஆசிரியரை அணுகவும்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், இயற்கை வாழ்வியல் நிபுணர்
வாகை நலவாழ்வு | +91 95978 50102 | Vinoth Kumar V S
Location:
Vellore, Tamil Nadu, India
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment