நோய்நாடி நோய்முதல் நாடி!
என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டு கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய பழக்கங்கள் எல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லை ஒரு மாத்திரை சாப்பிட்டால் எல்லாம் சரி ஆகிடும், ஒரே இஞ்செக்சன் போட்டா போதும் வேற ஒன்னும் வேணாம், அந்த தெரபி எடுத்துகிட்ட நோய் காணாம போய்டும், அந்த சித்தா டாக்டர போய் பாருங்க பத்தியமே தேவையில்லை, அந்த ஹீலர போய் பாருங்க எல்லாம் அவர் பார்த்துப்பாரு ... இது தான் பெரும்பாலான மக்களின் நம்பிக்கை, இதை தான் மருத்துவ துறை நண்பர்க ளும், மக்களும் தெரிந்தோ தெரியாமலோ மீண்டும் மீண்டும் சமூகத்தில் விதைத்து கொண்டிருக்கிறார்கள், இது தான் நம்புவதற்கும், கடை பிடிப்பதற்கும் எளிதாக உள்ளது.
நோய்க்கான காரணங்களை நீக்காமல் நோயிலிருந்து விடுபட முடியும் என்ற மூட நம்பிக்கையில் உங்கள் நேரத்தையும், குணம்பெரும் வாய்ப்பையும் இழக்காதீர்கள்.
நோயிலிருந்து விடுபட விருப்பம் இருக்கும் பட்சத்தில் முதலில் நோய்க்கான காரணங்களை நீக்குங்கள்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
இயற்கை வாழ்வியல் நிபுணர்
+91 95978 50102
Comments
Post a Comment