சூரிய குளியல் - Sunbathing!
இயற்கைக்கு திரும்புவதற்கும், ஆரோக்கியத்தை பெருக்குவதற்கும் சூரிய ஒளி அவசியமாகிறது. அறிவியலாளர்கள் சொல்லுகின்ற 'வைட்டமின் டி' யை தாண்டி இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் சூரிய ஒளி அத்தியாவசியமான ஒன்று. சூரியனில் சுற்றி திரிந்த காலம் போய் நாகரிக வாழ்வில் சூரியனை பார்ப்பதே பெரும் பாடாக ஆகி விட்டதால் அன்றாட சூரிய குளியல் என்ற நடை முறை அவசியமாகிறது.
நேரம்: காலை அல்லது மாலை வெயில் - இளஞ்சூரியினில் சூரிய குளியல் எடுப்பது சிறந்தது, அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது எடுக்கலாம் அப்படி எடுக்கும் பொழுது மிக குறைந்த கால அவகாசத்திற்கு மட்டும் எடுக்க வேண்டும் (ஒரு சில நிமிடங்கள் மட்டும்), உடல் சூடாவதற்கு முன்பே வெயிலில் இருந்து வந்து விட வேண்டும்.
கால அளவு: உடலில் லேசான சூட்டை உணரும் வரை அல்லது சராசரியாக 10 - 20 நிமிடங்கள்
- சூரிய குளியல் எடுக்கும் பொழுது தலை மற்றும் முகம் நிழலில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும் (அல்லது) முடிந்த வரை தலை மற்றும் முக பகுதியில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் தாக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் - துண்டு அல்லது ஈர துண்டு பயன்படுத்தலாம்.
- உடலின் பெரும் பகுதியில் சூரிய ஒளி படும் படி பார்த்து கொள்ள வேண்டும் , குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் சூரிய ஒளி படுவது மிகுந்த பயனளிக்கும். முழு சூரிய குளியல் எடுக்க வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக தலை மற்றும் முகம் தவிர்த்த அனைத்து இடங்களிலும் சூரிய ஒளி படும் படி சூரிய குளியல் எடுப்பது அவசியம்
- முழு சூரிய குளியல் எடுக்க வாய்ப்பில்லாதவர்கள்
- குறைந்த அளவு உடை அணிந்து கொண்டு சூரிய குளியல் எடுக்கலாம்
- லேசான பருத்தியிலான, காற்றோட்டமான ஆடையை அணிந்து கொண்டு சூரிய குளியல் எடுக்கலாம்
- பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமாவது சூரிய ஒளி படும் படியான ஏற்பாடு செய்யலாம்
*சூரியனில் இருந்து பெறக்கூடிய ஒளிக்காகவே சூரிய குளியல் எடுக்கப்படுகிறது, வெப்பத்திற்காக அல்ல. குளிர், மழை காலங்களிலும், மேகமூட்டமாக இருக்கும் போதும் கூட சூரிய குளியல் எடுக்கலாம்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
Click here if you are interested in my Wellness Workshops https://goo.gl/P5K6Je
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார், நல்வாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102
Comments
Post a Comment